நாட்டெங்கும் கர்வா சௌத் 2025 விழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், இணையத்தில் பாரம்பரியத்துக்கு சற்றே “மாடர்ன் ட்விஸ்ட்” கொடுத்த ஒரு வீடியோ மிரள வைக்கும் வகையில் வைரலாகி வருகிறது.

 

X பக்கத்தில் @sankii_memer என்ற யூசர் பகிர்ந்த இந்த வீடியோ, கர்வா சௌத் என்றால் உணர்வுகள் என நினைக்கும் நேரத்தில், அதற்கு நடுவே நகைச்சுவையை புகுத்தும் வகையில் அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

இந்த வீடியோவில், கர்வா சௌத் தினத்தில் ஒரு மனைவி முதலில் கிரட்டியில் வழியாக நிலவைக் காண்கிறார், பின்னர் புன்னகையுடன் கணவனைப் பார்ப்பதுபோல் நடக்கிறார். இதுவரை எல்லாம் பாரம்பரியமான கர்வா சவுத் போலத்தான் தெரிகிறது.

ஆனால் அடுத்த சில நொடிகளில் தான் ‘ட்விஸ்ட்’ ஆரம்பமாகிறது. மனைவி திடீரென தன் மொபைலை எடுத்து கணவனின் கால்களை படம் எடுத்து வணங்கி ஆசீர்வாதம் பெறுகிறார்.

இந்த ‘டிஜிட்டல் ஆசீர்வாதத்துக்கு’ கணவரும் சமாதானம் கொடுக்கவில்லை. அவர், “இதோ உனது கர்வா சவுத் பரிசு!” என்று சொல்லி தன் மொபைலில் ஒரு பெரிய தங்க சங்கிலியின் படத்தை மனைவிக்கு காண்பிக்கிறார்.  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.