பாலன்பூரில் ஓலா ஷோரூம் முன் ஒரு வாடிக்கையாளர் தனது ஸ்கூட்டருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவஜராத் மாநிலத்தின் பாலன்பூரில் உள்ள ஓலா ஷோரூம் முன்புறம், வாடிக்கையாளர் தனது ஓலா ஸ்கூட்டரை கெரோசின் ஊற்றி தீ வைத்தார்.

இதற்கு காரணம், முந்தைய நாள் அவர் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் பட்டாசு வாங்கச் சென்றபோது, ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் சட்டத்தில் திடீரென பிரிந்து போனது.

அதிர்ஷ்டவசமாக, ஹைவேயில் இல்லாததால் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாடிக்கையாளர் ஷோரூம் நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபத்தில் இந்த அபாயகரமான செயலைச் செய்தார்.

இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, ஓலா நிறுவனத்தின் சேவை தரம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளரின் தொடர் புகார்களைப் புறக்கணித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை இச்சம்பவத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் ஓலா ஈலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு எதிராக பொதுமக்களிடையே அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை, ஆனால் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் புகார் தீர்வு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.