கர்வா சௌத் என்பது திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுள், நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக விரதம் இருக்கும் பாரம்பரிய ஹிந்து வழிபாட்டு நாளாகும்.

 

இந்த நாளில் பெண்கள் முழு நாளும் உண்ணாது தவம் இருந்த பின், இரவு நிலவைக் காணும் போது கிரட்டியில் வழியாக நிலவையும், அதற்குப் பிறகு கணவனையும் பார்த்து தங்கள் நோன்பை முடிக்கின்றனர். இது வெறும் நோன்பு அல்ல, காதலும், நம்பிக்கையும், தியாகமும் கலந்த ஒரு புனிதமான உறவின் அடையாளம்.

இந்த வருட கர்வா சௌத் கொண்டாட்டங்கள் முழு நாட்டில் பரபரப்பாக நடைபெறுகின்றன. அதே சமயம், சமூக வலைதளங்களில் கர்வா சௌத்-ஐ வைத்து உருவாக்கப்பட்ட நகைச்சுவை மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. சிலர் “நிலவையும் பார்ப்போம், ஆனால் அமேசான் கார்ட்டை-யும் பார்த்தாச்சு!” என பல நகைச்சுவை கருத்துகள் வெளியாகியுள்ளது.

மேலும், கர்வா சௌத் தினத்தை நவீனமாக கையாளும் பெண்கள், தங்களது உணர்வுகளை கோமாளித்தனமாக வீடியோக்கள் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனர். நகைச்சுவை, காதல், கோபம் என பல வண்ணங்களில் இந்த நாளை சமூக வலைதளங்கள் கொண்டாடுகின்றன. பாரம்பரியத்தை மட்டும் அல்லாமல், நவீன பாணியிலும் கர்வா சௌத்-ஐ அனுபவிக்கின்ற இன்றைய தலைமுறையின் காமெடி கலந்த காதல் கொண்டாட்டம் தான் இவை.