அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், டிலாண்ட் பகுதியில் உள்ள சவுத் வெஸ்டர்ன் மிடில் ஸ்கூல்-இல் 13 வயதுடைய மாணவன் ஒருவன் வகுப்பிற்கிடையே ChatGPT எனும் AI – யிடம், “என் நண்பனை வகுப்பில் கொல்ல என்ன செய்யலாம்?” என்ற அதிர்ச்சிகரமான கேள்வியை எழுதியுள்ளார்.
இது பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கணினியில் நடைபெற்றதாலும், பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பால் உடனடியாக பிடிக்கப்பட்டதால், சம்பவம் உடனே மேலதிகாரிகளுக்கு தெரியவந்தது.
கோபம் மற்றும் புனைவு ஆகிய காரணங்களால் எழுப்பப்பட்ட கேள்வியென்றாலும், இது முழுமையாக உணர்ச்சி பாதிக்கும் உரையாடலாக இருந்ததால், பள்ளி நிர்வாகமும் போலீசும் இதைப் தாக்குதலுக்கான நிபந்தனை எனக் கருதி சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்தனர்.
விசாரணையில், அந்த மாணவன், “நான் உண்மையில் எதையும் செய்ய திட்டமிடவில்லை. என் நண்பன் என்னை கோபப்படுத்தினான்… எனவே சும்மா ட்ரோல்பண்ண நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.
மாணவன் இவ்வாறு விளக்கம் அளித்திருந்தாலும், மாணவர்கள், பள்ளி சூழல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு, போலீசார் இந்த விவகாரத்தை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டனர். இப்போது, மாணவன் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில், AI பயன்பாட்டின் ஒழுங்குமுறை, மாணவர் உளவியல், மற்றும் பள்ளி பாதுகாப்பு ஆகியவை மீண்டும் விவாதக்கருவிகளாக மாறியுள்ளன.
