சமூக ஊடகங்களில் தினமும் புதிய ஸ்டண்ட் ரீல்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றன. இளைஞர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து ஆபத்தான காட்சிகளை உருவாக்கும் நிலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் கதவிலிருந்து ஒரு இளம் பெண் தொங்கியபடி ரீல் எடுக்க முயல்வதும், அவளது தோழி அவளைப் பிடித்து நிற்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

ரீல் எடுக்கும்போது அந்த பெண் ரயிலின் கதவின் பாதியிலேயே தொங்கியபடி காணப்பட்டார். சில நொடிகளில், அவர் அருகே இருந்த கம்பத்தில் மோதி, கீழே விழுந்தார். வீடியோவில் அந்த மோதல் மிகவும் தீவிரமாக நடந்தது தெளிவாகக் காணப்படுகிறது. அந்த இளம் பெண் உயிருடன் உள்ளாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அவருடன் இருந்தவர்கள் அவளை இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட விடாமல் தடுத்திருக்க வேண்டியது அவசியமென நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்த பெண்ணின் அலட்சியம் குறித்து பலரும்  கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் இவ்வகை ஆபத்தான ஸ்டண்ட்கள் சமூகத்தில் தவறான செய்தியை அனுப்புகின்றன. இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று பலர் பதிவிட்டுள்ளனர்.