உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தவுலத்பூர் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. நேஹா என்ற பெண், தனது கணவர் ராஜு மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்தார். அதேபோல், ராஜுவும் தனது மனைவி மீது இதே குற்றச்சாட்டை வைத்தார். இதனால் வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தாக்குதலும் நடந்தது. இதையடுத்து, ராஜு தூங்கியபோது, கோபத்தில் இருந்த நேஹா, கத்தியால் அவரது தனிப்பட்ட உறுப்பை தாக்கியதாக கூறப்படுகிறது.

ராஜுவின் தந்தை மகிபால், காயமடைந்த மகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராஜுவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவரது திருமணம் ஐந்து மாதங்களுக்கு முன்பு பதயூன் மாவட்டத்தில் உள்ள மிர்ஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த நேஹாவுடன் நடந்தது. தற்போது, இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.