மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள சிதர்வை கலா கிராமத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு 8 வயது சிறுவன் தனக்கு 20 ரூபாய்க்கு குர்குரே வாங்கித் தராததால், தனது அம்மாவும் அக்காவும் தன்னை கயிற்றால் கட்டி அடித்ததாக கூறி, காவல்துறையின் அவசர எண்ணான 112-ஐ அழைத்து புகார் செய்தான். இந்த புகாரை கேட்ட காவலர்கள் சிறுவன் அழுததால் அவனை ஆறுதல்படுத்தி, உடனடியாக அங்கு செல்வதாக உறுதியளித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரை சிரிக்கவும், காவல்துறையின் அன்பான அணுகுமுறையை பாராட்டவும் வைத்துள்ளது.

காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, சிறுவனையும் அவனது தாயையும் அழைத்து ஆலோசனை வழங்கினர். காவலர் உமேஷ் விஸ்வகர்மா, குழந்தையை அடிப்பது தவறு என்று தாய்க்கு அறிவுறுத்தினார். மேலும், அந்த காவலர் அன்புடன், சிறுவனுக்கு குர்குரே வாங்கிக் கொடுத்தார். இதனால் சிறுவனின் முகத்தில் புன்னகை திரும்பியது. இந்த இனிமையான தருணம் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடையே காவல்துறையின் மனிதாபிமானமான செயலுக்கு பாராட்டுகளை பெற்றுள்ளது.