தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 2) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாளை அரசு மற்றும் அரசு உதவிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும், புதிய மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த மாணவர் சேர்க்கை விழா சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், அதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஆற்ற வேண்டும் எனவும் இயக்குனர் கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளார்.