தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஒன்பது குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜயின் உரையைக் கேட்க, கரூரில் மக்கள் திரண்ட போது ஏற்பட்டது. சுமார் 30,000 பேர் கூட்டமாக திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் மாலை 7.40 மணிக்கு வந்ததாக டிஜிபி ஜி. வெங்கட்ராமன் தெரிவித்தார்.
நெரிசல் காரணமாக பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தது, நெரிசலுக்கு காரணமானது. விழுந்தவர்களில் பலர் நெருக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். நிகழ்வின் போது விஜய் தண்ணீர் பாட்டில்கள் வீசும் வீடியோ, ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு விடுக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்வையிட்டு, உயிரிழந்த சிறுவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர் விட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
கரூர்: உயிரிழந்தவர்களை பார்த்து கதறி அழுத பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி. pic.twitter.com/N7WIYoEgmw
— RAMESH-MURUGESAN (@rameshibn) September 27, 2025
