தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள் நிலையில் இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு உயரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் பாஜக கட்சியின் அலிஷா அப்துல்லா இந்த சம்பவத்திற்கு திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டி உள்ள நிலையில் செந்தில் பாலாஜியையும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கரூரில் நடந்த நிகழ்வுக்கு இரண்டு கட்சிகள் தான் காரணம்.ஒன்னு பாதுகாப்பு கூட கொடுக்க முடியாமல் விஜய் மீது காலணி வீசி.கரண்ட் கட் செய்து இது போன்ற சம்பவம் நடக்க காரணமாக இருந்த ஆளுங்கட்சி திமுக இன்னொன்னு அடிப்படை அறிவு கூட இல்லாத ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள தவெக கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களில், நெரிசலில் சிக்கி கைகுழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதே தமிழக காவல்துறை தான் தைப்பூச திருவிழாவில் 2 லட்சம் மக்கள் தொகையில் கலந்து கொள்ளும்போது பாதுகாப்பு வழங்கியது என்று பதிவிட்டுள்ளார்.

 

 

இதேபோன்று மற்றொரு பதிவில், கரூரில் இரவு தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களில், நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்.உடற்கூறு ஆய்வு கூட செய்யாமல். இரவே முதல்வர் அஞ்சலிக்காக வரிசைப்படுத்தி வைக்கப்பட்டது ஏன். இது தான் திமுகவின் அரசியல். இதற்குக் காரணம் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று போதுமான பாதுகாப்பு அளிக்காமல்.அரசியல் செய்தது கரூர் செந்தில் பாலாஜி அரசு என்று பதிவிட்டுள்ளார்.