கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சை உறைய வைக்கிறது.

விஸ்வநாதபுரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தஜோதி என்பவரது மனைவி ஹேமலதா (வயது 30), தனது மகள் சாய்லெட்சனா (வயது 8), மகன் சாய்ஜீவா (வயது 4) ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு பிரசார கூட்டத்திற்கு சென்றிருந்தார்.

கூட்ட நேரத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் மூவரும் சிக்கினர். சிலநேரத்துக்கு பிறகு மூச்சுத் திணறிய நிலையில் அனைவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், தாயும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.