இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகி, பார்வையாளர்களை பதற வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு கார் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு சிறுவன் ஓடி வந்து காரின் முன்புறம் விழுந்து விடுகிறான். அந்த சமயம், சிறுவனின் தந்தை அருகிலேயே இருந்தாலும், தனது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்ததால், கவனிக்கவில்லை. கார் சிறுவனின் மீது ஏறி சென்றதும் தான் கவனித்து, அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த வீடியோ வைரலானதும், பலர் சிறுவனின் தந்தையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “மொபைல் போனில் மூழ்கி, குழந்தையின் பாதுகாப்பை மறந்துவிட்டீர்கள்” என்று கருத்து தெரிவித்து, அவருக்கு குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம், பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்காமல் போனில் ஈடுபடுவதன் ஆபத்தை எடுத்துரைக்கிறது என்று நெட்டிசன்கள் கருதுகின்றனர்.