ஒரு இன்ஸ்டாகிராம் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதில், ஒரு மதுபானம் அருந்தும் இடத்தில் ஒரு இளைஞர் திடீரென மற்றொருவரின் முகத்தில் கண்ணாடி பாட்டிலால் அடிக்கிறார். இதைத் தட்டிக்கேட்க வந்த மற்றொரு நபரை வேறொருவர் தாக்க, அங்கு கைகலப்பு ஏற்படுகிறது. இந்தக் காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் உள்ளது.
ஆனால், காணொளியில் அடுத்து வரும் காட்சி ஒரு பெரிய ட்விஸ்ட். காவல்துறையை குறிக்கும் வகையில் நடிகர் சூர்யாவின் ‘சிங்கம்’ படத்தின் காட்சி காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தகராறைத் தொடங்கிய இளைஞரை காவல்துறையினர் நடு ரோட்டில் அடித்து, கைது செய்யும் காட்சி இடம்பெறுகிறது. இந்த திருப்பம் காணொளியைப் பார்த்த நெட்டிசன்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
