பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் – சந்தனா தம்பதிகள், கடந்த மே 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூட, பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தனா, பிரவீனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடல் ரீதியாக பிரவீன் நலமாக இருப்பது தெரியவந்தது. இருப்பினும், மன அழுத்தம் காரணமாக தாம்பத்தியம் தவிர்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், சந்தனாவின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் தலையிட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 17-ந்தேதி சந்தனாவுடன் அவரது உறவினர்கள் பிரவீனின் வீட்டுக்கு வந்து, அவரை தாக்கியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே கொண்டு சென்றுள்ளனர். மேலும், அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. பிரவீன், சந்தனா தன்னை திருநங்கை என அவதூறாக பேசினார் என்றும், சொத்தை எழுதி தரக்கோரி மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனா மற்றும் அவரது குடும்பத்தினரை கேள்விக் கேட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பெங்களூரு நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
