கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக்கொண்ட செந்தில்குமார் அவர்களிடமிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து செந்தில்குமார் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

எனினும் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட விஷ்ணுகுமார், இராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜிம்சன் மற்றும் இடிகரை கார்த்திக் போன்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு காவலர் எனக் கூறி நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.