சமீபத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.  அந்த வகையில், ஒருவனின் அதிரடியான செயல் தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது. இது சம்பந்தமான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பரவி, அனைவரையும் ஆச்சரியத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தி விட்டது. ஒர் இசைக்குழு நிகழ்ச்சியில் நடந்த இந்த செயல், பார்வையாளர்களை மறுபடியும் பார்ப்பதற்கு தூண்டுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Humbiharii (@humbiharii)

வீடியோவில், மேடை அலங்கரிக்கப்பட்டு, அதில் ஒரு பெண் நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறார். ரசிகர்கள் அந்த நடனத்தில் முழுமையாக ஈடுபட்டு ரசிக்கின்றனர். ஆனால் அங்கு அமர்ந்திருந்த ஒரு நபர் மட்டும் ஒட்டுமொத்த பார்வையை தன் மீது திருப்பிக்கொள்கிறார். அந்த நபர் கையில் ‘செக் புத்தகம்’ வைத்திருப்பது போல தெரிகிறது. அவர் திடீரென ஒரு செக்கில் ஏதோ எழுதி, கையெழுத்திட்டு, அதை கிழித்து, மேடையில் நடனமாடும் பெண்ணை நோக்கி சென்று கொடுக்கிறார்.

இந்த வீடியோவை @humbiharii என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பேர் பார்த்து வியப்பையும் வினோதத்தையும் பகிர்ந்துள்ளனர். ஒருவர், “அண்ணா, செக் எழுதுறதுக்கு முன்னாடி பாங்க் பாலைன்ஸ் பாருங்க… பவுன்ஸ் ஆகுமான்னு பார்த்துக்கோங்க” என கலாய்த்துள்ளார்.