மும்பை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கி நேற்று  மாலை புறப்பட்ட இண்டிகோ விமானம் (176 பயணிகளுடன்) எதிர்பாராத விதமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் கழிவறைக்குள் வெடிகுண்டு மறைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் மும்பை விமான நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் வழங்கியதையடுத்து, அதிகாரிகள் அதனை மிகுந்த பரபரப்புடன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவித்தனர்.

அதன் பேரில், இண்டிகோ விமானம் இரவு 7.20 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டதுடன், விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதனை முடிந்ததும், அதே விமானம் சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கி மீண்டும் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.