இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு இளம் பெண்ணிடம் அவரது காதலன் அந்தப் பெண் ஹீல்ஸ் அணிந்து இருந்ததால் பிரேக் அப் செய்துள்ளார். இந்த சம்பவம் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் ரெட்டிடில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில மாதங்களாக 26 வயதுடைய ஒருவருடன் காதலாக இருந்து வந்ததாக கூறும் அந்தப் பெண், “எங்களுக்குள் உயரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை.

நான் அவரை விட சற்று குறைவான உயரம் தான். எனக்கு அது பெரிய விஷயமா இருந்ததில்ல, ஆனா அவருக்கு அது பெரிதாயிட்டுச்சு” எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இருவரும் ஒரு பார்ட்டிக்கு சென்றபோது, அந்தப் பெண் ஹீல்ஸ் சாண்டல் அணிந்திருந்தது காதலனுக்கு பிடிக்கவில்லை. இதனால் அதே காரணத்தை கூறி அடுத்த நாளே உறவை முடித்துவிட்டார்.

மேலும், “அந்த நாள் முழுக்க அவரு மோசமான மனநிலையில் இருந்தார். வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, நீ என்னை விட உயரமா தெரிவது எனக்கு பிடிக்கலன்னு நேரடியாக கூறினார். இந்த சம்பவத்தின் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீன்ஷாட் கூட அந்த பெண் ரெடிட்டில் பகிர, அது 15,000-க்கும் மேற்பட்ட அப்வோட்களைப் பெற்றுள்ளது.

இந்த கதை வைரலான பிறகு, பல நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து, “அவங்க வயசில பெரியவங்களா இருக்கலாம், ஆனா எண்ணத்தில் உயரமே இல்ல” என்றும், “அத்தனை உயரம் இருந்தாலும், மனசு இளஞ்சிவப்புதான்” என்றும் கலாய்த்து வருகின்றனர்.