உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கமலுபீர் கிராமத்தில் நடந்த காதல் சம்பவம், தற்போது அந்த பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட இரட்டை காதல் விவகாரம், இரண்டு ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலுபீர் பகுதியைச் சேர்ந்த கேசவ் குமார் (28) என்பவர், திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவரது மனைவியின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வந்த நிலையில், அவரது மனைவியின் சகோதரியினா **கொழுந்தியாள் கல்பனாவுடன் (19) நெருக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது.
இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, கேசவ் குமார் மற்றும் கல்பனா இருவரும் வீட்டைவிட்டு ஓடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கேசவ் குமாரின் மைத்துனரான ரவீந்திரன் (22), “அக்காள் கணவர் குடும்ப நம்பிக்கையை உடைத்துவிட்டார் என்று கருதி, பழிவாங்கும் நோக்கில், ஏற்கனவே தானும் காதலித்து வந்த கேசவ் குமாரின் தங்கையை (19) அழைத்துக்கொண்டு, மறுநாளே வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.
இது தொடர்பாக இரு குடும்பங்களும் போலீசில் புகார் செய்ததை அடுத்து, பரேலி போலீசார் இரு ஜோடிகளையும் தீவிரமாக தேடி, சில நாட்களில் கண்டுபிடித்து, அவர்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு குடும்பங்களும் சமரசத்திற்கு வர, இரு ஜோடிகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். அவரவர் குடும்பத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் இரு குடும்பங்களும் விவகாரத்தை சமரசமாக முடித்தாலும், இதில் உண்மையில் பாதிக்கப்பட்டவர் கேசவ் குமாரின் மனைவிதான் என்ற கருத்துகள் தற்போது சமூக வட்டாரங்களில் எழுந்துள்ளன. இந்த சம்பவம் குறித்தும், குடும்ப உறவுகளின் நம்பிக்கையையும், பெண் பாதுகாப்பையும் பற்றிய விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
