தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று கூறி பொது தேர்வு எழுத வேண்டாம் என பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தன் மகனின் படிப்பு வீணாகிவிட்டதே என்று தீபா வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த தீபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த செல்வம் கதவு திறக்காததால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீபா தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.