தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயை முதல்வர் வேட்பாளராக அந்த கட்சி அறிவித்துள்ள நிலையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் முதல் மாநாடு முதலே திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் விழுப்புரத்தில் முதல் மாநாட்டினையும் மதுரையில் இரண்டாவது மாநாட்டின் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு திருச்சி மற்றும் அரியலூரில் காவல்துறை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.

நடிகர் விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை அரியலூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த பரப்புரையின் போது துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது உள்ளிட்ட 25 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் வாகனம் தயார் நிலையில் இருக்கிறது. இதனை முன்னிட்டு நான் உங்க விஜய் வரேன் வரலாறு திரும்புகிறது என்ற லோகோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.