தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில், செப்டம்பர் 3ஆம் தேதி புதன்கிழமை காலை, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து, அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவ வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகியுள்ளது.
இந்த விபத்து, நர்கெட்பள்ளி–அட்டாங்கி நெடுஞ்சாலையில், காலை 6.57 மணிக்கு நிகழ்ந்தது. வீடியோவில், அதிவேகமாக வந்த லாரி, ஒரு கல்வெட்டில் மோதி, திடீரென சாலையில் தலைகுப்புற விழும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.
லாரியின் முன்பக்கத்தில் இருந்த கண்ணாடி உடைந்து, ஓட்டுநரின் அருகில் அமர்ந்திருந்த ஒருவரை வாகனத்திலிருந்து தூக்கி வீசும் காட்சியும் அதில் தெரிகிறது. விபத்துக்குப் பிறகு, லாரி ஓட்டுநர் கண்ணாடி வழியாக வாகனத்திலிருந்து வெளியே வந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த இருக்கையில் இருந்த ஒருவர் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நல்கொண்டா விபத்து தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, வேகக்கட்டுப்பாடு, சாலைகளின் பாதுகாப்பு தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. லாரி ஓட்டுநர் மீது பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Speeding lorry crashes into a culvert & over turns on #Narketpally–#Addanki highway near #Nalgonda bypass.
One person critically injured, another sustained minor injuries.
The #accident was caught on a nearby shop’s #CCTV. pic.twitter.com/f1akCHJtwr
— NewsMeter (@NewsMeter_In) September 3, 2025
