அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை  எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தற்போது நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார். மேலும் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.