இணையத்தை தற்போது ஆக்கிரமித்து வரும் ஒரு வைரல் வீடியோவில், இளைஞர் ஒருவர் தன் அம்மாவின் சேலையை தனக்கென ஒரு பாரம்பரிய ஆடையாக மாற்றிக் கட்டும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @insta\_bhoo எனும் யூசர்நேமில் பகிர்ந்துள்ள போஷன் மல்கானி, சேலையை வழக்கமாக கட்டுவது போலத் தொடங்குகிறார். பின்னர் அதை சிறிது மடித்து, வேஷ்டியாக மாற்றுகிறார். பாரம்பரிய தோற்றத்துடன் கூடிய இந்த அழகான ஸ்டைல் பலரிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“ஸ்டைல் என்பது நாம் உருவாக்குவது தான். ஆனால் சில நேரங்களில் அது வாரிசாக வரும் ஒரு பொக்கிஷமா இருக்கும். இந்த சேலையில் என் அம்மாவின் கதைகள் இருக்கிறது, இப்போது அது என் கதையிலும்வந்துவிட்டது…” என பதிவில் உருக்கமாக கூறியுள்ளார் போஷன். பாரம்பரிய அணிவகுப்புகளும், கலாசார ஆடைகளும் மறைந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இளைய தலைமுறை இவ்வாறு அதை மீண்டும் கொண்டுவருவது சமூக ஊடகங்களில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
இந்த வீடியோக்கு கீழ் பதிந்துள்ள கருத்துகள் அனைவரையும் கவர்ந்துள்ளன. “இனிமே நம்ம ஆண்களும் அரை மணி நேரம் தயாராகுவாங்க போல இருக்கே!” என்று நெட்டிசன்கள் சிரித்தபடி கருத்து தெரிவித்துள்ளனர்.
