சமூக வலைதளங்களில் இப்போது ஒரு வீடியோ தீயைப் போல பரவி வருகிறது. ஒரு பாலத்தில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. அந்த வேளையில் அருகில் நிற்கும் மக்கள் அதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று அந்த கார் நகர ஆரம்பிக்க, அதுவரை நின்று பார்த்தவர்கள் எல்லாம் ஓட ஆரம்பிக்கிறார்கள்.

 

அந்த காட்சியில் சிலர் தங்கள் பைக், கார் எல்லாம் அங்கேயே விட்டு விட்டு தப்பிக்க ஓடுகிறார்கள். சிலர் ஓட ஓட கீழே விழுகின்றனர். வீடியோவில் மக்கள் அலறுவதும், பதறுவதும் சத்தமாக கேட்கிறது. எதுவும் புரியாத நிலை, அந்த காரே அசந்து நகரும் போது எல்லோரும் உயிர் காக்க ஓடிச் செல்லும் காட்சியே கண்ணுக்கு பதற்றம் தருகிறது.

இந்த வீடியோவை @dogesh\_bhai என்ற X பக்கம் பகிர்ந்திருக்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, “இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்- ன்னு நினைச்சேன்!”, “டெக்னிக்கல் கோளாறா?”, “எந்த நகரம் இது?” எனக் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் எங்கே நடந்தது என்றும், தீ எதனால் பிடித்தது என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.