இன்று லைக், ஷேர், வீயூஸ் என்ற வலையில் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், சிலர் தங்கள் உயிரையே அபாயத்தில் விடத் தயங்குவதில்லை. அப்படியான வீடியோக்களுள் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர், நேருக்கு நேர் ஒரு ஆட்டுடன் மோதிக்கொள்கிறார்.

வீடியோவில், ஒரு இளைஞர் ஹெல்மெட் அணிந்து, தனது 2 கைகளையும் தரையில் வைத்து, ஒரு ஆட்டை போல் நடிக்கிறான். இதைக் கண்ட ஆடும், எதிரில் இன்னொரு ஆடு தான் கிறது என்று நினைத்து, கோபத்துடன் தாக்க ஆரம்பிக்கிறது. ஹெல்மெட் அணிந்து இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லாததால், அந்த இளைஞரும் திரும்பத் தாக்க, இருவருக்கும் “தலை மோதும் யுத்தம்” போல ஒரு சண்டை நடக்கிறது.

 

இந்த வீடியோவை *@AMAZlNGNATURE* என்ற X பக்கம் பகிர்ந்துள்ளது. தற்போது இதை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதுடன், பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “இப்படி வேற என்ன பண்ணுவாங்க லைக்குக்காக!” என்று கூறியிருக்க, மற்றொருவர், “இது ஆபத்தான விளையாட்டு… ஜாக்கிரதையா இருங்க!” என்றும் எச்சரித்துள்ளார்.