சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், முதலையின் கொடூரமான தாக்குதலுக்குள் சிக்கிய குட்டி குரங்கினை காப்பாற்ற, ஒரு பெரிய குரங்கு வந்து அதனை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. குட்டி உயிரைக் காப்பாற்றும் அந்த குரங்கின் வீரமும், அதிரடியும் பார்ப்பவர்களைக் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.
जंगल की सबसे रोमांचक लड़ाई: गोरिल्ला ने अपने बच्चे को मगरमच्छ के जबड़े से बचाने के लिए दिखाई अद्भुत ताक़त और साहस! 🦍🐊😱
आपकी राय में, ये पल इंसान को क्या सिखाता है??? pic.twitter.com/y26NM9yNlF
— NoorAlam Ansari (@NoorAlamba48520) August 28, 2025
28 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், முதலை, குட்டி குரங்கைக் கடித்து கொண்டு போக முயற்சிக்க, அந்த அம்மா குரங்கு அதிரடியாக களத்தில் இறங்கி, முதலையின் கழுத்தை பிடித்து தாக்குகிறது, தூக்கி எறிகிறது போன்ற உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பிற உயிராக இருந்தாலும், தாயின் சக்தி எதையும் தாண்டும்” என்பதை இந்த வீடியோ சொல்கிறது.
@NoorAlamba48520 என்ற X பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். “மகனை காக்க அம்மா குரங்கின் பாசமும் சக்தியும்!” என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோக்கு 1.10 லட்சத்துக்கும் மேல் பார்வைகள் வந்துள்ளன. வன விலங்குகளின் பாசமும் பாதுகாப்பும் மனிதர்களை போல் இருக்கிறதே என பலரும் வியப்பை தெரிவித்து வருகின்றனர்.
