மகாராஷ்டிரா மும்பையில் தானே – வாஷி நோக்கிச் சென்ற ஹார்பர் லைன் லோக்கல் ரயிலில் நடந்த பரபரப்பு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டம் நிரம்பிய ரயிலில் இளைஞர் ஒருவர் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியை நோக்கி கேவலமான செயலில் (சுய இன்பம்) ஈடுபட்டார். இதனை கவனித்த மற்றொரு பயணி, பெண்ணிடம் இருக்கையை மாற்றுமாறு எச்சரித்ததும், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதிர்ச்சியில் ஆவேசமடைந்த பெண் பயணி, அந்த இளைஞரை நேரிலேயே அடித்து, திட்டியதோடு, மற்ற பயணிகளும் சிலர் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோவை கைபேசியில் பதிவு செய்த பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், சம்பவம் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், பெண் பயணி அந்த இளைஞரை அறைந்தும், காலால்
உதைத்தும் தாக்குவது, அருகில் இருந்த மற்றொரு நபர் கூட அவரை அடிப்பது தெளிவாகக் காணப்படுகிறது. கூட்டத்தின் கோபத்திலிருந்து தப்பிக்க, அவமானப்பட்ட அந்த இளைஞர் இயங்கிக் கொண்டிருந்த ரயிலிலிருந்து குதித்து, பிளாட்ஃபாரத்தில் விழுந்து படுத்துக் கொண்ட காட்சி வீடியோவின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த காட்சியை “abrar12shaikh” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த அப்ரார் ஷேக், “பெண்கள் பாதுகாப்பை சவாலாக்கும் இப்படிப்பட்ட கேவலக்காரர்களுக்கு கடுமையான தண்டனை அவசியம். மௌனமாக இருப்பது குற்றவாளிகளுக்கு வலு சேர்ப்பதாகும்.
அனைவரும் இப்படிப்பட்ட சம்பவங்களை உடனடியாக போலீசாருக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கும் புகாரளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
