சென்னை மாவட்டம் மயிலாப்பூரை சேர்ந்தவர் கபிலன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு 23 வயது ஆகிறது. கபிலன் இசை கல்லூரியில் படித்து வருகிறார். டேட்டிங் செயலி மூலம் கபிலனுக்கு ஒரு பெண் அறிமுகமானார். அந்தப் பெண் கபிலனை தொடர்பு கொண்டு மயிலாப்பூர் வடக்கு மாட வீதி அருகே வந்தால் இன்ப பரிசு காத்திருக்கிறது என கூறியுள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றார். அப்போது திடீரென வந்த 2 பேர் கபிலனை கழிவறைக்கு இழுத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தனது கையில் பணம் இல்லாததால் கபிலன் கூகுள் 1500 ரூபாய் பணத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இருப்பினும் விடாமல் அவர்கள் நிர்வாணமாக கபிலனை வீடியோ எடுத்து இதை யாரிடம் ஆவது கூறினால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கபிலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சூர்யா, அஜய் என்ற இரண்டு வாலிபர்களை கைது செய்தனர்.

அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சோசியல் மீடியாவில் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.