திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
