மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போதும் முன்னதாக நடிகர் விஜயின் சினிமா படத்தில் இடம்பெற்ற வாடி வாடி கைப்படாத சிடி பாடலுக்கு அமைச்சர் விஸ்வநாதன் அங்கிருந்தவர்களோடு சேர்ந்து நடனம் ஆடினார்.

இது குறித்து அவர் கேட்டபோது முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அங்கிருந்தவர்கள் அழைத்ததன் பேரில் குதூகலமாக ஆட்டம் போட்டோம் இதில் என்ன தப்பு இருக்கிறது என்று கூலாக பதில் சொன்னார். மேலும் இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று வாய் தவறி கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.