மதுரை ஆணையூர் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, “கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகங்களில் காதல் திருமணம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகங்களை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள்.

பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் திருமணம் முடித்து வைப்பார்களா? எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் திருமணம் நடக்க வைப்பார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதியைப் பேசும் கட்சிகள் உண்மையில் அதனை நடைமுறையில் பின்பற்றுகிறார்களா என்ற கேள்விக்குரிய நிலை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.