இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானிக்க, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியும், பிரியான்ஷ் ஆர்யாவும் களம் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ், இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து, ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட உலக சாதனையைத் தனது கணக்கில் எழுதிக்கொண்டார்.
அரைசதத்திற்குப் பிறகும் வைபவ் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவம் ஓயவில்லை. மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட அவர், வெறும் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியோடு 94 ரன்களைக் குவித்தார். ஒட்டுமொத்த மைதானமும் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தைக் காணக் காத்திருந்த வேளையில், ஆட்டத்தின் 15-வது ஓவரில் அந்த சோகம் நிகழ்ந்தது.
இலங்கை கேப்டன் சஹான் ஆராச்சிகே வீசிய பந்தில், கவர் திசையில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு காற்றில் உயரப் பறந்தது. அதை மிட்-ஆஃப் திசையில் நின்றிருந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் மிக அற்புதமாக கேட்ச் பிடிக்க, வைபவ் 6 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு ஆட்டமிழந்தார். சதம் கைநழுவினாலும், அவரது இந்த அசுரத்தனமான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
THE DISMISSAL OF VAIBHAV SOORYAVANSHI.
– 94 Off 29 balls from Vaibhav Sooryavanshi with 324.14 strike rate.🔥 pic.twitter.com/2s9g6hBbTz
— Maina Singh (@Maina_Singhx77) June 21, 2026
