அருணாச்சலப் பிரதேச மாநிலம், டிராங்–தவாங் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய நிலச்சரிவால் சாலையில் பயணித்த பல வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளன.
கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் போது, மலையிலிருந்து விழுந்த பெரிய கற்கள் மற்றும் பாறைகள் சாலையின் நடுப்பகுதிக்கு உருண்டு வந்ததுடன், அங்கிருந்த வாகனங்கள் மீது தாக்கியதால் மக்கள் அச்சத்தில் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், கார் ஓட்டுநர்கள் தங்களின் வாகனங்களைத் திருப்பிச் சாலையையில் அங்கேயே விட்டு தப்பி சென்றனர்.
View this post on Instagram
“>
இதனால்தான் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்ததும், நிர்வாகம் உடனடியாக சாலையை தற்காலிகமாக மூடி, இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது.
अरुणाचल प्रदेश के दिरांग-तवांग मार्ग पर भारी भूस्खलन, देखिए वीडियो#ArunachalPradesh | #Landslide pic.twitter.com/ZS19DGAe3J
— NDTV India (@ndtvindia) August 26, 2025
“>
பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
