கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தனி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான ஜாஸ்மின் ஜாபர் என்பவர் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று ரிலீஸ் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார்
இந்து மதம் அல்லாத ஜாஸ்மின் ஜாபர் கோவில் குளத்தில் இறங்கியதால் குருவாயூர் தேவஸ்தானம் தற்போது தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிகாலை 5 மணியிலிருந்து நண்பர்கள் வரை சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் சடங்குகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
