புதுக்கோட்டையில் உள்ள ஆவாரக்குடிபட்டியில் நடைபெற்ற 51-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
இந்த விழாவின்போது, தமிழக அமைச்சர் TRB ராஜாவின் மகனும், போட்டியில் வெற்றி பெற்றவருமான சூரிய ராஜபாலு மேடைக்கு வரும்போது, அண்ணாமலையிடமிருந்து கழுத்தில் பதக்கம் அணிவிக்க அனுமதிக்காமல், கையில் மட்டும் பெற்றுக்கொண்டு புகைப்படத்திற்கு நின்றார்.
இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அண்ணாமலை, “நன்றாக வரணும்டா” என சூரிய ராஜபாலுவிடம் அழைப்பாகக் கூறியதும் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இது அண்ணாமலையிடம் மேடையில் நிகழ்ந்த அவமரியாதையாக பேசப்படுகிறது.
புதுக்கோட்டை: ஆவாரக்குடிபட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டி நடந்து வருகிறது. இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
அப்போது அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த… pic.twitter.com/KSLfyaZPeI— PttvOnlinenews (@PttvNewsX) August 25, 2025
“>
மேடையில் ஒரு தலைமை விருந்தினரிடம் இவ்வாறு பதக்கம் பெற மறுத்ததைக் கடும் அவமரியாதையாக சிலர் கண்டிக்க, மற்றொரு தரப்பினர் அதை அரசியல் நோக்கில் புரிந்து கொள்கிறார்கள். TRB ராஜாவின் மகன் என்ற வகையில், இது அரசியல் தொடர்பான செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலைவிடம் நேரடியாக பதக்கம் பெற மறுத்த இந்த செயல், பாஜகவின் ஆதரவாளர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.
