உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள கோலாபார் பகுதியில் ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த சோகமான விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தனியார் லக்ஸரி பேருந்து, மோட்டார் சைககிளில் வந்த அந்த இளைஞர் மீது மோதியது. இந்த சம்பவம் அரகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த பயங்கரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
हल्द्वानी में गोलापार हुआ बड़ा हादसा बस से टकराया बाइक सवार तेज रफ्तार बनी हादसे की वजह सीसीटीवी में कैद हुआ पूरा वीडियो pic.twitter.com/LMG6vIsE3M
— Danish Khan (@danishrmr) August 24, 2025
வீடியோவில், பைக் ஓட்டுனர் வேகமாக ஓட்டி வந்ததையும், ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த பேருந்தை, பைக் ஓட்டுநர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதை காண முடிகிறது. மோதிய தருணத்தில் அந்த இளைஞரின் உடல் பேருந்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டு இழுக்கப்பட்டது. அவரின் பைக், பேருந்தின் கீழ் நசுங்கியது. இந்தக் கோர விபத்தில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
