காட்டில் ஒவ்வொரு வேட்டையாடும் விலங்குக்கும், தனது இரையை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக கழுதைப்புலிகள் (ஹைனாக்கள்), காட்டு நாய்கள் போன்றவை கூட்டமாக வந்து, வேட்டையாடிய இரையை பறித்துக்கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை காட்டின் இரக்கமற்ற வேட்டையாடி சிறுத்தை, தன் தவறை சுறுசுறுப்புடன் சரிசெய்து அனைவரையும் அசர வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ஒரு மானை வேட்டையாடிய சிறுத்தை அதை மரத்தில் ஏற்றி சாப்பிட்டு கொண்டிருந்தபோது, திடீரென மானின் உடல் கீழே விழுந்தது. அந்த தருணத்தில் கழுதைப்புலி அங்கு பாய்ந்தது.

ஆனால் சிறுத்தை, எந்தவித தாமதமும் இன்றி மின்னல் வேகத்தில் மரத்திலிருந்து கீழே குதித்து, தன் இரையை மீண்டும் வாயில் பிடித்துக்கொண்டது. அந்தக் காட்சி பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கழுதைப்புலிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல், சிறுத்தை தனது இரையை மீண்டும் மரத்தில் ஏற்றி பாதுகாப்பாக சாப்பிட்டது. இந்த சுறுசுறுப்பு தான் காட்டின் உண்மையான திறமைசாலி  யார் என்பதற்கான பதிலாகளால் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை தென்னாப்பிரிக்காவின் மாலாமாலா கேம் ரிசர்வ் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது மில்லியன் கணக்கான மக்கள் இதைப் பார்த்து வருகின்றனர். சிறுத்தையின் சுறுசுறுப்புக்கும் ஆற்றலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சுற்றுலா பயணி ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்த இந்த காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் மாபெரும் வைரலாகி வருகிறது.