அமெரிக்காவை சேர்ந்த நிக்கோலஸ்(38) என்பவர் எனது 2008-ஆம் ஆண்டு தனது காதலியை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வழக்கில் இருந்து தப்பிக்க முயன்ற நிக்கோலஸ் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இறந்து விட்டதாக மக்களை நம்ப வைக்க போலியான இரங்கல் செய்தியை பரப்பினார்.
பின்னர் அலாவெர்டியன் என்ற புதிய பெயருடன் நிக்கோலஸ் ஸ்காட்லாந்துக்கு தப்பி சென்றார். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் நிக்கோலஸ் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது உடலில் இருந்த டாட்டூ மூலம் காவலர்கள் நிக்கோலஸை அடையாளம் கண்டனர். அதன் பிறகு 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு நிக்கோலஸ் நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலஸ் நேர்மையற்றவர், ஏமாற்றுக்காரர் என கூறி பாதிக்கப்பட்ட நிக்கோலஸ் காதலியின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.
இறுதியில் நிக்கோலஸ் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கு ஐந்து முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
