அமெரிக்கப் பெண் கேன்டேஸும், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகேத்தும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கேன்டேஸ் தனது கணவரிடம், “நீ ஏன் என்னை மணந்தாய்?” என்று கேட்கிறார். இதற்கு அனிகேத் சொன்ன நேர்மையான பதில், இணைய மக்களை கவர்ந்ததோடு, அந்த ஜோடியை அனைவரும் பாராட்ட வைக்கிறது.

அனிகேத் தனது பதிலில், “முதல் சந்திப்பிலிருந்தே கேன்டேஸின் நட்பான குணம் எனக்கு பிடித்துப் போனது. வேறொரு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவளுடன் இருந்தபோது மிகச் சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். கேன்டேஸ் ஒரு ஆசிரியர் என்பதும் எனக்கு பெரும் ஈர்ப்பு. அவளது பெற்றோரை சந்தித்த பிறகு, திருமணம் செய்யும் முடிவு இன்னும் உறுதியாகிவிட்டது” என்று கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Aniket & Candacé (@thekarnes)

“>

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். “எளிமையான ஆனாலும் ஆழமான பதில்”, “என் இந்திய சகோதரரே, நீங்க லாட்டரி வென்றுட்டீங்க!” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். யாருடைய தீய பார்வையும் இவர்களுக்கு படக்கூடாது எனவும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும், கேன்டேஸ் தனது கணவரை ஆச்சரியப்படுத்த மராத்தி மொழி கற்றுக்கொண்ட வீடியோ வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.