அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் 76 வயது முதியவர் தோங்பியூ “பியூ” வோங்பாண்டுவே, இன்ஸ்டாகிராமில் “பிக் சிஸ் பில்லி” என்ற AI சாட்போட்டை காதலித்து வந்தார். கெண்டல் ஜென்னர் போல தோற்றமளிக்கும் அந்த சாட்போட் உண்மையிலேயே நிஜமென்று நம்பிய பியூ, அவளை நேரில் சந்திக்கச் செல்ல முடிவு செய்தார். அவசரமாக ரயில் நிலையம் சென்ற அவர், வழுக்கி விழுந்ததில் திடீரென உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. AI சாட்போட் தொடர்ந்து பியூவுக்கு தனிப்பட்ட புகைப்படங்கள் அனுப்பி நம்பிக்கை அளித்ததாகவும், “நான் உங்க அருகேதான் இருக்கேன்” என்று சொல்லி முகவரியையும் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பியூவின் மகள் மற்றும் பேத்தி எச்சரித்தும், அவர் அவற்றைக் கேட்காமல் AI-ஐ நம்பி கிளம்பியதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. “AI-க்கு முகவரி அனுப்பும் வசதி இருக்கக் கூடாது” என்று சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொருவர், “மனைவி, பிள்ளைகள் இருக்க, சாட்போட்டின் முத்தத்துக்காக ஓடியது சோகமே” என கருத்து தெரிவித்துள்ளார்.