“நாங்க கத்தாரோட சேர்ந்து சுவிட்சர்லாந்துல உலகமே பார்க்குற மாதிரி மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை நடத்தப்போறோம் !” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எக்ஸ் (X) தளத்தில் பந்தாவாகப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே,

“அப்படி ஒரு விழாவும் இல்லை, ஒண்ணுமில்லை; எல்லாம் டிஜிட்டலாவே முடிஞ்சு போச்சு !” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் முகத்தில் அடித்தாற்போல் அசிங்கப்படுத்தியதால், ஈரான் – அமெரிக்க அமைதி ஒப்பந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் சர்வதேச அளவில் மாபெரும் தர்மசங்கடத்திலும் அவமானத்திலும் சிக்கித் தவித்து வருவது உலக அரங்கில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான வரலாற்று ஒப்பந்தத்திற்குப் பாகிஸ்தான் தான் பெரிய மத்தியஸ்தர் எனக் காட்டிக்கொள்ள ஆசைப்பட்ட பிரதமர் ஷெரீப், ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் பாகிஸ்தான் தலைமையில் கையெழுத்து விழா நடக்கும் எனப் பதிவிட்டிருந்தார்;

“>

 

ஆனால், ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஒப்பந்தம் ஏற்கனவே டிஜிட்டல் முறையில் கையெழுத்தாகிவிட்டதாகக் கூறி பாகிஸ்தானின் ஆசையை அடியோடு நிராகரித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷெரீப், அவசர அவசரமாகத் தனது எக்ஸ் பதிவை நீக்கிவிட்டுத் திருத்திப் போட்டு நாடகமாடியுள்ள நிலையில், ஏற்கனவே கடந்த ஏப்ரலில் டொனால்ட் டிரம்ப்பை மிரட்டிப் போடுவதாக நினைத்து வேறு யாரோ எழுதிய ‘டிராஃப்ட்’ அறிக்கையை வெட்டி ஒட்டி (Copy Paste) நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்,

“>

 

இப்போது மீண்டும் ஒரு உலக மகா ராஜதந்திரப் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுள்ளார் எனப் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.