கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய காதலிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காரணத்திற்காக தன்னுடைய தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இவருடன் அவருடைய காதலி பவித்ரா கவுடா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த வருடம் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சட்டத்திற்கு மேலானவர் யாருமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கௌடா கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அவர்களுக்கு சிறப்பு சலுகை கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.