சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் இன்று உலகமெங்கும் வெளியான நிலையில், ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்க நடிகர் தனுஷ் சென்றார். அதே திரையரங்கில் லதா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மனைவியை விட்டு பிரிந்திருந்தாலும், தனது தலைவரை தரிசிப்பதை விடமாட்டார் என தனுஷின் ரசிகர்கள் பெருமிதத்துடன் பேசுகின்றனர்.

இதனுடன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து மகிழ்ந்தனர். திரையரங்குகள் முழுவதும் பண்டிகை போல் காட்சியளிக்க, ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.