டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மெட்ரோ ரயிலுக்குள் குரங்கு ஒன்று புகுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று குரங்கிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றனர். சிலர் தங்கள் செல்போன்களை எடுத்து அந்த அதிர்ச்சியூட்டும் காட்சியை பதிவு செய்ய தொடங்கினர். இந்த காணொளி எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் “பாருங்க அண்ணா இப்போ குரங்குகள் கூட டெல்லி மெட்ரோ-ல பயணிக்க ஆரம்பிச்சுட்டேன்னு” கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர் நகைச்சுவையாக வெளியே ரொம்ப மோசமான போக்குவரத்து நெரிசல் இருக்கு மிருகங்கள் கூட குறுகிய பாதையில் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க என்று தெரிவித்திருந்தார்.