​தேனி மாவட்டத்தில் உள்ள கொட்டகுடி பகுதிக்கு, பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டு சுமார் 56 வருடங்களாக அரசுப் பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் அதிரடி உத்தரவிற்குப் பிறகு தற்போது அந்த ஊருக்கு முதன்முறையாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு தங்களது ஊருக்குள் பேருந்து வந்ததால், கொத்தகுடி பகுதி மக்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிராமத்திற்குள் வந்த அரசுப் பேருந்தைத் தேனி கொத்தகுடி பகுதி மக்கள் மிகுந்த நெகிழ்ச்சியோடு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் மாலை அணிவித்துத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் வெளிப்படுத்தினர்.