தமிழன் திரைப்படத்தில் அனைவரும் அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கதாநாயகனாக நடித்தபோது நடிகர் விஜய் ஒரு வசனம் பேசியிருப்பார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட வசனத்தை இப்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் நிஜமாக்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.
எங்கள் அண்ணன் எதையும் சும்மா சொல்ல மாட்டார்..🔥🔥 pic.twitter.com/vGceCCucWP
— Kaaviya TVK (@kaaviyaTVK) June 6, 2026
பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் நாட்டின் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ‘தமிழன்’ திரைப்படத்தில் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், இன்றைக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அதைச் செயலாக்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
