காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக உள்ள அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சிசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதிலாக மாறி உள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தவறாது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலியல் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயர்ந்தப்பினார். இருப்பினும் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சபம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடனடியாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அடுத்து தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இளம் பெண்ணுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் அபிராமி தனது தாய் மற்றும் தந்தை வயதானவர்கள் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்துவிட்டேன். எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு பதில் அளிக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
