சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் துரைராஜ் என்பவரின் மகள் இலக்கியா ஸ்ரீ (21) என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரி பெண்ணான இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி(21) என்பவரை பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலை படித்து வந்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சுயமரியாதை திருமண நிலையத்தில் வைத்து வழக்கறிஞர் முன்னிலையில் சுயமரியாதை திருமண உறுதி மொழியை எடுத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருநம்பியை திருமணம் செய்த பட்டதாரி பெண்ணுக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.