சென்னை மாவட்டம் புழல் லட்சுமிபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா. இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில் மூன்றாவது மனைவியுடன் பல ஆண்டுகளாக காதர் பாஷா வசித்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு 16 வயதில் முதல் உள்ளார். இந்த நிலையில் காதர் பாஷா தான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 9-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது பாஷாவின் மூன்றாவது மனைவி நிஷா கோபத்தில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றினார். இதனால் படுகாயமடைந்த காதர் பாஷா வலியில் அலறி துடித்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நிஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
